வாசியோ முறையொன்றும் இங்கு இல்லை,
வாய்விட்டு உச்சரிக்கும் மந்த்ர மில்லை
ஊசிமுனை வாசல்ஒன்றைத் திறந்து காட்டி,
உன்னையே அங்குக்காவல் சிலநாள் வைத்து,
தேசிகனார் ஞானகுரு பார்வை மூலம்
தீட்சைமறு படியுமீந் தழைத்துச் சென்று,
மாசில்லா ஆதிநிலை யறியும் உச்சி
மன்றத்தில் அமர்த்திடுவார்; அமைதி கிட்டும்.