Thursday, April 12, 2012

பொறாமையை ஒழிப்போம்

இரண்டு பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய சிறப்புகளில் ஏற்ற தாழ்வு இருக்கலாம். அவர்களில் ஒருவரைக் கூப்பிட்டு மாலை போடுகிறார்கள். மற்றொருவரைச் சாதாரணமாகப் பாராட்டுகிறர்கள் என்று வைத்துக் கொள்வோம். “ அவருக்கு மாத்திரம் மாலை? எனக்கு வெறும் பாராட்டா?” என்று மாலை கிடைக்காதவர் நினைப்பார். இதுதான் பொறாமை, அப்படி இருககவே கூடாது. குறைகளை ஒவ்வொன்றாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும். அவற்றில் பொறாமையை நாம் அறவே ஒழித்து விட வேண்டும்.



மனிதன் என்றால் அவன் பதினாறு காரணங்களால் ஆக்கப்பட்டவன். அவையாவன: - 1. கருவமைப்பு 2. உணவு வகை 3. காலம் 4. தேசம் 5. கல்வி 6. தொழில் 7.அரசாங்கம் 8.கலை 9.முயற்சி 10.பருவம் 11.நட்பு 12.சந்தர்ப்பம் 13.பல ஆராய்ச்சி 14.பழக்கம் 15.வழக்கம் 16.ஒழுக்கம் இவற்றிற்கேற்ப. மனித வாழ்விற்கு வேண்டிய ஏழு பேறுகள், சப்த சம்பத்துகள் உருவாகும். அவையாவன 1.உருவமைப்பு 2.குணம் 3.அறிவின் உயர்வு 4.கீர்த்தி 5.உடல் வலிவு 6.சுகம் 7.செல்வம்.


அந்த ஏழு சம்பத்துக்களும் மனித வாழ்விற்கு அவசியம். சில காரணங்களால் ஒன்றிரண்டில் நம்மில் சிலர் குறைப்பட்டிருக்கிறோம். அதை மாற்றிக் கொள்ளலாம். எப்படி? சிந்தித்து சிந்தித்து, நம்மை விட மேம்பட்டவராக யாரைக் கருதுகிறோமோ அவர்போலவே நானும் ஆக வேண்டும் என்ற எண்ணத்தாலும், அதைச் செயல்படுத்தியும் மனிதன் வேண்டிய அளவு வளத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.


“எப் பொருளை, எச் செயலை, எக்குணத்தை, எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைத்தால் அப் பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல் அறிவினிலும், உடலினிலும் மாற்றங்காணும்; இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்”.

No comments:

Post a Comment