Friday, March 30, 2012

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்


அணு தோன்றிய விதத்தையும் அதன் செயல்பாடுகளையும் பாடும்போது அறிவியல் கவிஞன்.

அண்ட கோடிகளின் இயக்கங்களைப் பாடும்போது வானியல் கவிஞன்.

மூலகங்களின் கூட்டுப் பற்றிப் பேசும்போது வேதியியல் கவிஞன்.

எல்லாம் வல்ல சுத்தவெளியின் அற்புதங்களைப் பாடும்போது மெய்ஞ்ஞானக் கவிஞர்.

சொல்லால் மட்டும் நம்பாதே, சுயமாய் சிந்தித்தே தளிவாய்  என்று பாடும்போது சீர்திருத்தக் கவிஞன்.

சுத்தவெளியிலிருந்து விண் தோன்றி, காந்த அலை மலர்ந்து ஓரறிவு ஈராறிவு என ஆறறிவு மனிதன் வரை பரிணாம வளர்ச்சி பெறும் பாடல்களை பாடும்போது உயிரியல் கவிஞன்.

எளிய முறை உடற்பயிற்சி பாடுங்கால் மருத்துவக் கவிஞன்.

தியானத்தைப் பற்றிப் பாடுங்கால் பதஞ்சலி முனிவர்.

அன்பு.அருள், அறிவைப் பற்றிப் பாடும்போது அருட்பிரகாச வள்ளலார்.

எளிய முறை குண்டலினி யோகத்தைப் பாடும் போது அவன் ஓர் இருபதாம் நூற்றாண்டு திருமூலர்.

No comments:

Post a Comment