
உயிர் காந்த மையம் (Genetic Centre) இதனைக் கருமையம் என்றும் கொள்ளலாம். விந்து, உயிராற்றல், சீவகாந்தச் சுழல் இம்மூன்றும் இணைந்து உடலின் மையப்பகுதியில் மூலாதாரமென்று யோகியர்கள் வழங்கும் உயிர் நிலையமே கருமையம் ஆகும். இறைநிலையும் அதன் அலையாற்றலும் இணைந்து செயல்புரியும் மனித வாழ்வின் இயற்கை நிதியாகும். இதுவே ஆன்மாவென்றும், அகம் என்றும், உயிர்நிலை என்றும் வழங்கப்படுகின்றது. மனிதனுடைய சொல், செயல், எண்ணம் எனும் மூன்று வினைகளையும் காந்த அலைகளாக மாற்றப்பட்டு சுருக்கமாக இருப்பு வைத்து, முன் பிறவி, பின் பிறவி இவைகளை இணைத்தும், உயிர்த்துகள் மையம், உலகங்களின் ஈர்ப்பு மையம், எல்லா உயிர்களின் கருமையம் இவற்றோடு இறைவெளி மூலம் ஒன்றிணைத்து, வினைப்பதிவுகளுக்கேற்ப, விளைவுகளை தவறு இன்றி அளித்து வரும் பேரியக்க மண்டலக் கணிப்பொறி (Universal Computer ) யாக விளங்கும் திருவருள் நீதிமன்றமே சீவகாந்தக் கருமையம். - மகரிஷி